எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Friday, March 11, 2011

ஒரு அர்த்தம் கிடைக்குமா????..

உன் முகம்
பார்த்திடாமல் கனவில்
மட்டும் உன்னுடன்
வாழும் இந்த 
வாழ்க்கைக்கு உன்னால்
 ஒரு அர்த்தம் கிடைக்குமா????..

Saturday, October 30, 2010

கண்கள் கலங்கினாலும்

கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும் உள்ளம்
சிரிப்பதில்லை
கண்மணி உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயேவாழ்கிறாய்

Thursday, September 30, 2010

நீயின்றி நானில்லை

நீயின்றி நானில்லை என்றாய் !!
பின் தீயின்மேல் என்னைவீசி கொன்றாய்  !!
நேற்றிருந்தோம் வெண்ணிலவில் ஒன்றாய் !
இன்று வேறொருத்தன் கைப்பிடித்து சென்றாய். !!!

♥ காதல்♥

"இதயமாக உள்ள உன்னை ஒரு 
கவிதையாக வரைய தொடங்கினால் 
எத்தனை புத்தகம் வேண்டும் என்று 
எனக்கு தெரியாது 
அதனால் தான் பெண்னே! 
கவிதை தலைப்பிற்கு பதிலாக 
உன் பெயரை எழுதி 
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......

காத்திருக்கிறேன் ...

நீ கேட்டதும்
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் ...
என் மனதை ,,

சொல்.....

நீ திரையிட்டு மறைக்கும்,-உன்
பெண்மையின் ரகசியங்களில்
நான் தேடும் என் காதலை,
எந்த இடத்தில்
ஒழித்து வைத்துள்ளாய் ??,
ஏதேனும் ஓர் இடத்திலா?,, 

Wednesday, September 22, 2010

உன்னாலும் முடியாது

என்னுள் நிறைந்து இருக்கும் உன்னை யாராலும் பிரிக்க முடியாது.. 
ஏன் நீயே 
நினைத்தாலும் கூட...