எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Friday, June 11, 2010

சுவடு

உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!

கண்ணீர்..... கண்ணீர்.........

கண்ணீரை நான் ரசித்தேன்
எனக்காக அவள் அழும் போது
அதே கண்ணீரை நன் வெறுக்கிறேன்
என்னைபிரிந்து அழவைக்கும் போது..........

சந்தோசம்

அனுப்பியவர்:டெல்லில் இருந்து விஸ்வா  
உன்னை
பார்க்கும்போது வருகிற சந்தோசத்தை விட,
உனக்காக காத்து இருக்கும்போது! 
கிடைக்கிற சுகம், 
மிகவும் 
இனிமையாய் இருக்கிறது !!

காதல்

அனுப்பியவர்:டெல்லில் இருந்து விஸ்வா   
"நீ அன்று சொன்னாய்,
 பிறப்பது வெற்றி பெறுவதற்கு என்று,
 நான் இன்று உணருகிறேன் 
அந்த வெற்றி என்னவென்று, 
உன் மனதில் என் காதல்.

இப்படியும் சமாளிப்போம்.........



நான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது !!

உதவி செய்

என் வாழ்க்கை புத்தகத்தில்
உன் பெயர் எழுதிய தாள்களை
கிழித்து ஏறிய முயல்கிறேன் 
இதற்காவது உதவி செய். 

இனிமையான காதல் கவிதை

பெண்ணே !
நீ மவுன விரதம் இருந்தால், முதலில்
உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன !!

காதல் சிகிச்சை

இதய துடிப்பு ஏறும்.....
வார்த்தை எல்லாம் குளறும்....
காதல் வந்தா நீ நேயாளி 
கல்யாணம் தாண்டா அதுக்கு சரியான வழி...........

என்ன மொழி ?

தமிழ் முதல் சீனம் வரை
பல மொழிகள் புரிகிறது
உன் விழிகள்ப் பேசும்
வார்த்தை மட்டும் புரியவில்லை!
எந்த பல்கலை கலமும்
எந்த பேராசிரியரும்
விளக்க முடியாத
பாஷையடி
உன் விழிகள் பேசுவது!!