எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Wednesday, September 1, 2010

என்னவளே

என்னவளே !
எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்...!
உன் இமைகாளகச் சொன்னான்...
உறங்கி விடுவேன் என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னான்...
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்...!!
உன் கூந்தலாகச் சொன்னான்...
உன் முகம் மறையுமே என்று மறுத்துவிட்டேன்..!!
உன் உயிராகச் சொன்னான்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய் என்று உதிர்த்து விட்டேன் ..!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக துடித்துக் கொண்டு இருக்க...!!!

உன் முடிவு

நான் சொல்லிய வார்த்தைகளால்
நீ துடித்ததை நான் அறிந்தேன்,
உன் துடிப்பில் தான் 
என் இதயமும் துடித்துக்கொண்டே இருக்கிறது...
என்னால்  உணர முடிந்த
அந்த வார்த்தைகளுக்கு உன்னால் முடிவு கிடைக்கும்......