அனுப்பியவர் : அன்பு மலர்
நெஞ்சில் உதைத்த
போதும் அன்பு
மழை பொழிந்தாயே!
சிறுவர் பட்டாளத்தில்
ஓடி விழுந்தது போதும்
பாட்டுப் போட்டியில்
பரிசிழந்து நின்றபோதும்
பரிவுடன்
ஊட்டம் கொடுத்தாயே!
பருவ குழந்தையாய்
பருந்துகளின் கண்களில்
மாட்டிய போதும்
அடுத்த வீட்டுப்
பெண் எடுத்துச்
சொன்ன போதும்
என்னை நம்பி இருந்தாயே!
பருந்தே உலகம்
பறப்பதே இன்பம்
என கனாகண்டு
ஓடி வந்தபின்பு
உடம்பு இளைக்கிறதம்மா!
பறப்பது வலிக்கிறதம்மா!
பருந்தும் கடிக்கிறதம்மா!
அம்மா! அம்மா!
உன் மடியில் எனக்கு இடந்தந்து
என்னை அரவணைப்பாயா
உயிரோடு அல்லது
பிணமாகவாது...