எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Thursday, June 17, 2010

வாழ்ந்து பார்

உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா..
தற்கொலை செய்துகொள்..
தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா
வாழ்க்கையை வாழ்ந்து பார் -
கவிஞர் கண்ணதாசன்

இதய சுவர்கள்

என் இதய சுவர்களில்
இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது
பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்..!!

போதும் நிறுத்து

கண்ணே போதும் நிறுத்திவிடு !
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன் !!

இதயம்

அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு புரியவில்லை
அவளுக்கு இதயமே இல்லை என்று !!

சேலை

நீ
சேலை கட்டி வரும்போது தான்
எனக்கு பயமாய் இருக்கிறது ..!!
எங்கே சேலையும் என்போல் சரிந்து விடுமோ என்று !!

காத்திருக்கிறேன்

என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது !
உனக்காக தான் என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால்
எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது
என் மனது..!!!

இதய கடிகாரம்

நீ என்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா ?
நீ இன்றி இயங்க மறுக்கிறது !
என் இதயம்..!!

ஊஞ்சல்

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊஞ்சலாடுபவளே…
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…!!

காதல் விதி

முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..
எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!

யோசி

யோசித்த பின் நேசி ஆனால்...
நேசித்த பின் யோசிக்காதே 
அது
நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும் !!

பேனா கூட பேசுகிறது

அனுப்பியவர்: விஸ்வா
நான் உன்னை நினைத்து 
எழுதும் போது
என் 
பேனா கூட கவிதை பேசுகிறது,
அந்த கவிதைக்கு சொந்தக்காரி
நீ என்பதால்!!

காதல் வலி

பூட்டியிருந்த என் பிஞ்சு இதயத்தை 
திறந்து வைத்தது உன் 
கடைக் கண் பார்வை தான்.
இறுகியிருந்த என் இதயம் - முதன்முதலாய் 
தோற்றது உன்னிடம் தான்
என் இதயத்தில் இடம் பிடித்த நீ
சில வேளைகளில் என்னை 
சிரிக்க வைத்தாய்
பல வேளைகளில் என்னை 
அழ வைத்தாய் 
ஆனால் அந்த வலி எனக்கு 
அப்போது தெரியவில்லை.
இன்றோ, வலிக்கிறது என்று 
சொல்லக் கூட வழியில்லை 
இருந்தும் - நானும் வாழ்கிறேன் 
வெறும் நடைப் பிணமாய் 
எல்லோரிடமும் தோற்று, 
எல்லாவற்றிலும் தோற்று, 
என் ஆசைகளை நிராசையாக்கி 
என்னில் நானே செத்துக் கொண்டு இருக்கிரேன் !!!