எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Wednesday, June 9, 2010

காதலின் பிரிவு

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியிய் புலம்பிக்கொண்டிருந்தது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து
என்னை போல

என் காதல் அழுகிற குழந்தை மாதிரி



துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு.
உன்னை ஏன்
இப்படி காதலித்துத்தொலைக்கிறேன்.
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி..

ஏன் இந்த வெறுப்பு

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

கற்றுக்கொடு

எப்படி மறந்தாய்
என்னை
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

இது எப்படி முடிகிறது உன்னால் ?

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

உன் நினைவு

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

படித்ததில் பிடித்தது…………….

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பு

பையா- சுத்துதே சுத்துதே பூமி

பையா- துளி துளி மழையாய்