எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Monday, June 7, 2010

நீயே என் காதல் கவிதை


எல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு..
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப்பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னைப் மாதிரி இல்லையே
உன்னைப்பற்றிக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!
நீயே கவிதையென்பதை உணராமல்!!

...............உயிர்..

ஊமை காதல்


அற்புதமான காதலை
மட்டுமல்ல,
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய் !!

என் காதல் தவம்

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்
முனிவருக்கு கடவுள் மேல் இருப்பது பக்தி எனக்கு அவள் மேல் இறுப்பது காதல் அவளுக்கு என்மேல் இறுப்பது வீண் கோபம்விட்டு விடு கோவத்தைஇல்லை விட்டு விடுவேன்
என் உயிரை !!

அவளின் பார்வை


தவிர்த்தலுக்கென்றே
ஒரு பார்வை
வைத்திருக்கிறாய்-நீ
தவிப்பதற்கென்றே
ஒரு இதயம்
வைத்திருக்கிறேன் நான்

ஓஹோ இதுதான் காதலோ


நேற்று வரை
அவளிடம் பேச
பயந்த எனக்கு,
இன்றெப்படி வந்தது
தைரியம்!
அவளுக்கு திருமண
வாழ்த்துச் சொல்ல...?
ஓஹோ இதுதான் காதலோ