எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Thursday, June 24, 2010

படித்ததில் பிடித்தது !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி 

கை தவறி விழும் முன் சொன்னேன் 


'Sorry ' தாத்தா என்று …! 


தூங்கும் போது கழுத்து வரை 


போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் 

'Thanks ' ம்மா என்று …! 
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே 


வாழ்த்து அட்டையில் எழுதினேன் 


'Happy Birthday da' என்று …! 


காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் 


அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் 


'Good Morning Uncle' என்று …! 


கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் 


அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் 


'Hai' என்று …! 


மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் 


அவள் விரல் பிடித்தே எழுதுவேன் 


'I Love You' என்று …! 


இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை 


குத்தியது முள் … 


'அம்மா' என்று அலறினேன் 


குத்தியது முள்ளில்லை - என்னை 


குத்திக் காட்டியது - என் தமிழ் 

சிந்தனை செய் மனமே !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்க தோற்றால் வாழ்கையே இழப்பு ! 

நீ பிறந்து தரித்திரமாக இருந்தாலும் 
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் ! 
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . . ஆனால் 
அதற்கான தகுதி அனைவர்க்கும் உண்டு . . . முயன்றால் ! 
வாய்ப்புகளை பெறுபவன் அதிர்ஷ்டசாலி 
உருவாக்குபவன் புத்திசாலி
அதனை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்பவனே திறமைசாலி ! 

நேற்று நடந்ததை நினைத்திருந்தால் 
நாளை நடப்பது பிழையாகும் ! 
சிந்தித்து செயல்படு தோழனே 
வெற்றி உமக்கே !! 

இவன் தான் கடவுள் !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் 
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
பாசம் என்பது யாதெனக் கேட்டேன் 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் 
மணந்து பாரென இறைவன் பணித்தான்! 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன் 
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
வறுமை என்பது என்னெனக் கேட்டேன் 
வாடிப் பாரென இறைவன் பணித்தான்! 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! 
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் 
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! 


ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 


'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்! 

வாழ்வின் திசை மாற்றம் !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

அரை ஜான் அளவில் கருவறை 
அள்ளி முத்தமிடும் தாயின் கையில் சொர்க்கம் 
கேட்டதை வாங்கித்தரும் தந்தை தெய்வம் 
காலம் முழுதும் கை கொடுக்கும் கல்வி 
சின்ன சின்ன சண்டைகள் 
சிரிக்க வைக்கும் சிந்தனைகள் 
கண்ணீரை துடைக்கும் கரங்கள் 
காதல் கீதம் கொண்ட நெஞ்சம் 
நண்பர்கள் உறவாக 
நெஞ்சங்கள் மகிழ்வூட்ட 
நொடி முழுதும் நிம்மதி சந்தோசம் 
கவி பாடும் புலவனாய் 
காலம் முழுவதும் வாழ எண்ணிய நான் 
இன்று... 


வர்த்தகம் தேடி வாழ்கை அமைத்தேன் 

கை நிறைய பணம் 
கார் வீடு என்று அத்தனை வசதியும் கொண்டேன் 
காலத்தின் திசை மாற்றமோ 
இல்லை என் மனதின் திசை மாற்றமோ 
என் மனதில் துளியும் சந்தோசம் இல்லை 
பெற்ற பிள்ளையின் பரிவும் இல்லை 
மணம் புரிந்த துணையின் காதலும் இல்லை 


இப்போது என்னுகிறேன் 

எதற்கு இந்த கணினி பொறியாளர் என்ற பட்டம் 
என் பிள்ளை விட்டு விளையாடும் 
பட்டம் திசை மாறி பறப்பதை கண்டு !! 

இலங்கை

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ
அடக்க வேண்டுமென்று
அரசு சிங்கங்கள்...
ஆட்சியை கொண்டு அள்ளி வீசுகிறது
சிங்கள தமிழர்களை ...
ஆதரவோடு பொங்கி போராடும் புலிகள் ....
போரட்டத்தின் முடிவு
பலியாகும் அப்பாவி மக்கள்...
இரத்தத்தில் இலங்கை மிதந்தாலும்
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய்
காத்திருக்கிறார் புத்தர்
சிங்கமும் புலியும் மனிதனாக மாறவேண்டுமென்று ....

உன்னால் தானே நான் வாழ்கிரேன்

அனுப்பியவர்: டெல்லியிருந்து விஸ்வா
என் அன்பும் நீ
என் அறிவும் நீ 
என் பண்பும் நீ
என் பாசமும் நீ 
என் வாழ்வும் நீ
என் வலியும் நீ 
என் சோகமும் நீ
என் சொந்தமும் நீ 
என் கனவும் நீ
என் கண்ணீரும் நீ 
என் உணர்வும் நீ
என் உறக்கமும் நீ 
என் நினைவும் நீ
என் நிழலும் நீ 
என் குரலும் நீ
என் கோபமும் நீ 
என் சரிரம் நீ
என் சாரிரமும் நீ 
என் சிந்தையும் நீ
என் சிரிப்பும் நீ 
( இப்படி எல்லாமே நீ இருப்பதால் தானோ
  நான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.)

உன்னுள் நான் இருக்க

அனுப்பியவர் : பிரியா கிருஷ்னண் பெங்களுர்
எதிலும் விடுதலை தேடும்
மனிதர்களுக்கு .....
மனதில் உன் இதய சிறை விரும்பும்
சிறு பறவை நான் !

நலமறிய ஆவல்

அனுப்பியவர் : பிரியா கிருஷ்னண் பெங்களுர்
நலம் என்கிறாய் நான்
கேட்டகவில்லை 
நீ நலமானு உன்னை ,
நான் துடிக்கும் போது 
நீ மட்டும் எப்படி இருப்பாய் நலமாக ,
பொய் சொல்ல எப்படி கட்டாய நலமாக!! 

ஓரு வரண்ட கற்பனை

அனுப்பியவர் : லோகி- தாராபுரம் -
புன்னகையே புன்னகை யே ஏன்
கை விட்டு போனாய் ?
ஓ நீ பொன் நகை என்பதாலா
விலைவாசியால் சரி கனவில் கூட வரமறுப்பதேன்
புன்னகையே !!