எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Saturday, June 19, 2010

என்ன கொடுமை இது

காதலித்தும் பார்த்துவிட்டேன் ஒருத்தியை .. 
கண்களுக்கும் கூட ஓர் மொழி உண்டு என்று
தெரிந்து கொண்டேன் .. 
அவளை காதலித்த போது ... 
யார் கண் வைத்தார்கள் என்று தெரியவில்லை 
என்னவள் இன்று என்னுடன் இல்லை .... 
சத்தியமாக உன்னை என்றும் பிரியமாட்டேன் என்று 
சத்தியம் செய்த என் சகி 
இன்று சத்தியமாக என்னுடன் இல்லை........... 
களவும் கற்று மற என்றார்கள் .... 
அவள் என்னிடம் காதலை கற்று மறந்து விட்டாளோ?

கல்லறையில் காதல்

காதல் செய்தபோது மலர் கொடுத்தேன்
அந்த அழகிய மலருக்கு
ஏற்க்க மறுத்தால் பாவம்
கடைசியில் என்னை தேடி வந்தால்
கையில் மலரோடும் கண்ணில் கண்ணீரோடும்
என்னால் மலரையும் வாங்க இயல வில்லை !
அவள் கண்ணீரையும் துடைக்க இயலவில்லை !! 
காரணம் கல்லறையில் நான் 
அவள் நினைவுகளோடு மட்டும்...........

காதல் தத்துவம்

"காதல்
தோல்வியின் சின்னம்
தாஜ்மஹால்
வெற்றியின் சின்னம்
இதுவரை இல்லை
ஜெயித்தவன்
காதலை மதிப்பதில்லை
தோற்றவன்
காதலை மறப்பதில்லை"

என்னுள்ளே நீ இருப்பதனால்

என்னை விட உன்னை நேசித்தேன்..
உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன்..
என்னுள்ளே நீ இருப்பதனால்..!

என் கவிதைகள் ..

எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின் 
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி, 
இன்னும் 
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய 
மொழிகளின்
அரைகுறையான 
மொழி பெயர்ப்புகளே 
என் கவிதைகள்...!!

காதல் கணக்குகள்

லாபக் கணக்குகளை
போட்டு முடிப்பதற்குள் 
நஷ்டம் வந்து விடுகிறது 
காதலில்... 
நேற்றைய அவளின் சிரிப்பை 
முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன் 
இன்று முறைத்து விட்டு 
போகிறாள்..
சந்தோஷ கனவுகளை 
கவிதை ஆக்குவதற்குள்
சோகத்தை என் முன் 
கொட்டி விட்டு போய் விடுகிறாள் ...!!



கவிதையாகிய அவள் விழி..








கவிதை கண்டேன் உன் கருவிழியில்,
இனி கலங்காதே..நீ கலங்கினால்..
கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!