எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Saturday, October 30, 2010

கண்கள் கலங்கினாலும்

கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும் உள்ளம்
சிரிப்பதில்லை
கண்மணி உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயேவாழ்கிறாய்

Thursday, September 30, 2010

நீயின்றி நானில்லை

நீயின்றி நானில்லை என்றாய் !!
பின் தீயின்மேல் என்னைவீசி கொன்றாய்  !!
நேற்றிருந்தோம் வெண்ணிலவில் ஒன்றாய் !
இன்று வேறொருத்தன் கைப்பிடித்து சென்றாய். !!!

♥ காதல்♥

"இதயமாக உள்ள உன்னை ஒரு 
கவிதையாக வரைய தொடங்கினால் 
எத்தனை புத்தகம் வேண்டும் என்று 
எனக்கு தெரியாது 
அதனால் தான் பெண்னே! 
கவிதை தலைப்பிற்கு பதிலாக 
உன் பெயரை எழுதி 
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......

காத்திருக்கிறேன் ...

நீ கேட்டதும்
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் ...
என் மனதை ,,

சொல்.....

நீ திரையிட்டு மறைக்கும்,-உன்
பெண்மையின் ரகசியங்களில்
நான் தேடும் என் காதலை,
எந்த இடத்தில்
ஒழித்து வைத்துள்ளாய் ??,
ஏதேனும் ஓர் இடத்திலா?,, 

Wednesday, September 22, 2010

உன்னாலும் முடியாது

என்னுள் நிறைந்து இருக்கும் உன்னை யாராலும் பிரிக்க முடியாது.. 
ஏன் நீயே 
நினைத்தாலும் கூட...

Wednesday, September 15, 2010

தெரியாது

உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது
நான் காதலிக்கிறேன் என்று
ஆனால்
ஒன்று மட்டும்
தெரிகிறது
காதல்
காதலை
காதலிக்கிறது

Tuesday, September 14, 2010

பிடிக்கவில்லை

என்னை பிடிக்கவில்லை 
என்ற வார்த்தை கூட அழகு தான்!
அவள் உதடுகள் உச்சரித்தபோது.....




             உயிர்
நீ விரும்பும் உயிருக்கு 
உன் அன்புபுரியாது.....!
உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை தவிரவேறு ஒன்றும்தெரியாது....!!!

Thursday, September 2, 2010

உன் மேல் என் அக்கரை

கண்ணுக்குள் இருக்கும்
உன்னை 
என் கண்ணீரால் கழுவுகின்றேன்,
காதலித்து கைவிட்ட கறை கூட 
உன்மேல் இருக்க வேண்டாம் என்று!!




வெட்கத்தை சிந்தி சிந்தியே என்னை சிதற வைத்தாய் கவிதையாக...

தோல்வி

எத்தனை முறை பார்த்தாலும் தோற்று போகிறேன்..
அவளின் ஒரே பார்வையில் ..!!
மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

Wednesday, September 1, 2010

என்னவளே

என்னவளே !
எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்...!
உன் இமைகாளகச் சொன்னான்...
உறங்கி விடுவேன் என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னான்...
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்...!!
உன் கூந்தலாகச் சொன்னான்...
உன் முகம் மறையுமே என்று மறுத்துவிட்டேன்..!!
உன் உயிராகச் சொன்னான்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய் என்று உதிர்த்து விட்டேன் ..!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக துடித்துக் கொண்டு இருக்க...!!!

உன் முடிவு

நான் சொல்லிய வார்த்தைகளால்
நீ துடித்ததை நான் அறிந்தேன்,
உன் துடிப்பில் தான் 
என் இதயமும் துடித்துக்கொண்டே இருக்கிறது...
என்னால்  உணர முடிந்த
அந்த வார்த்தைகளுக்கு உன்னால் முடிவு கிடைக்கும்......

Tuesday, August 31, 2010

என் இதயம் துடிக்கிறது

அனுப்பியவர் : அருண்
இதயம் கரைகிறதே... 
உயிரை தீண்டும் சிரிப்பாலே...
உலகில இது போல இன்னும் எதுவும் கிடையாதே..
மலரொன்று எதிரிலே பேசுதே....
கடவுளின் தரிசனம் காட்டுதே... 
ஒரு சொல் ஒரு பார்வை...
உயிரில் ஏதோ நடக்கிறதே...
புதையல் கண்ட ஏழை போலே 
இதயம் துடிக்கிதே.....

Thursday, August 26, 2010

ஏற்றுக்கொள்

மனமே நலமா, 
உந்தன் மௌனங்கள் சுகமா,
உன் வலியை உனக்காக 
நான் சுமக்கிறேன்,
என் அன்பை மட்டும்
நீ ஏற்றுக்கொள்வாயா....

Tuesday, August 24, 2010

வேண்டுகொள்

பாஸாக வேண்டும் என்று
கோவில் சுவற்றில் இருவருமே
பேர் எழுதினோம்!
ஆனால்
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும் தான்
பார்க்கிறது

Friday, August 20, 2010

என்ன கொடுமை

காதலர் தினம்
இருப்பதானால் தானோ
என்னவோ
தெரியவில்லை 
“பிப்ரவரி “
மாதத்திற்க்கு
கூட ஆயுள் குறைவு !!!

Saturday, August 14, 2010

என்ன அழகு

தரை தொடாத விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள்
கூந்தலில்
ஒற்றை ரோஜா.!!

கிறுக்குகிறேன்

அன்று அவள் பார்வையால்
என்
இதயத்தில்
கிறுக்கி சென்றால்
நான்
இன்று
பேப்பரில்
கிறுக்குகிறேன் 

என் உயிர்

இத்தனை தடைகளை........ 
எப்படி தாண்ட வைத்தாய்... 
எனக்கே புரியவில்லை 
என்னை பற்றி 
உனக்காக வலிக்காத வரிகளை.............
 வலிமையாய் தேடுகிறேன்.......
 துளிகூட கிடைக்கவில்லை.....
 என் உயிர்

புதிது அல்ல

கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல 
நீ வந்து போனாலும்
 உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய் 
அதனால்தான் வலிக்கிறது இன்னும்.... 
ஆனாலும்
 வலிகள் ஒன்றும் புதிது இல்லையே எனக்கு,,,, 
 காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!

Monday, August 9, 2010

வரம் கொடு

 ரதியே உன்னை கண்டதும் மதி 'இழந்தேன்
 நிலவே உன்னை பார்த்ததும் 
சொல்லிலந்தேன் 
வரம் கொடுப்பாயா
 உன் காதலை ? 
கடன் கொடுப்பாயா
 உன் இதயத்தை ?

Friday, July 30, 2010

ஏன் இப்படி?

எப்போதும் என் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்த நீ, 
இப்போது
என் பெயர் இருப்பதால் என்னவோ உனக்கு பிடித்த ஷ்துதி கூட சொல்ல மறுக்கிறாய்....
(இது தான் வலியா.. இல்லை பழியா....)

Thursday, July 29, 2010

என்னுள் ரோஜாவாக நீ

அனுப்பியவர் : விஸ்வா
நான் ஒரு குப்பை,
என்னுள்ளளே!
பூத்த ரோஜா நீ,
என்னை பார்த்து விலகி சென்றவர்கள் ஏராளம்,
இப்போது என்னிடம் வருபவர்களும் ஏராளம்,
ஏனென்றால் என்னுள் நீ இருப்பதால்.......
(குப்பையில் பூத்த ரோஜா நீ...)

Wednesday, July 28, 2010

இதயம்

அனுப்பியவர் : விஸ்வா
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் 
காதலர்கள், 
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள்
அன்பான நண்பர்கள்......
( நன்றி: இதயத்தில் இருக்கும் அந்த நட்புக்கு......)

Saturday, July 17, 2010

என்னை பிடிக்கவில்லையா

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்
நானோ...
உனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்
இடைவெளியில்
கொஞ்சம் வேலை செய்வேன்..
நீயோ...
உன் வேலைகளுக்கு இடையே
என் குறுஞ்செய்திகளை படித்துகூட
பார்க்காமல் மொத்தமாய்
அழிப்பாய்..?!

மறவதே !!

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்

தினம்
உன் ரோஜா வளர்க்க
நீர் ஊற்றுவாய் மறக்காமல்...?!
தினம்
என் உயிர் வளர
ஒரு "குறுஞ்செய்தி" அனுப்புவாயா தோழி
மறக்காமல்..?

ஏன் மெளனம்

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்
உனக்கு தினமும்
நான் நூறு குறுஞ்செய்தி அனுப்புவது
ஒரு சாதனையே அல்ல...
ஆனால் அதில் நீ ஒன்றுக்கு கூட
பதில் அனுப்பாமல்
மௌனம் சாதிப்பாயே...
அதுதான் பெரிய சாதனை..?!

என் நினைவு

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்
உன் கைபேசி முழுவதும்
நிரம்பி வழியும்
என் குறுஞ்செய்தி போல....
என் நினைவு முழுவதும்
நீதானடி
நிரம்பி வழிகிறாய்...?!

நேசிப்பாய் ........

பெண்னை நேசித்தவன் 
ஒரு நாள் என்னையும் 
நேசிப்பான் !
இப்படிக்கு 


ஒயின் ஷாப் !!!!
          என்ன கொடுமை சார் இது

அட என்ன அதிசயம்

12 வருடத்திற்கு ஒரு முறை
பூக்கும்
குறிஞ்சி மலர் கூட
“ உன் புன்னகையில்
பார்த்தேன் !!!

நேசிக்கிறேன்

உலகத்தில் 
மலரை நேசிப்பவர்கள்
முள்ளை நேசிப்பதில்லை! .
நான் முல்லை நேசிக்கிறேன் 
ஒரு மலர் என்னை காயப்படுத்தியதால்!!

என் இதயம்

நீயோ... 
கிளிப்பிள்ளையாய் சொன்னதையே
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு 
என்னடியில்...............
இறக்கப் பிறந்த இதயம் 
ஏனோ துடிக்கத் துடிக்கின்றது 
உன்னைக் காணும் பொழுதுகளில்......

Friday, July 9, 2010

என்னை விட்டு செல்லாதே !

இடைபட்டவள் நீ.....
நிழலுக்கும் நிஜதிற்கும் 
இடைபட்டவள் நீ
கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ
கடல் நுரைக்கும் காற்றிற்கும் 
இடைபட்டவள் நீ
தோழிக்கும் காதலிக்கும் 
இடைபட்டவள் நீ
இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே..

மாறிக்கொள்

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே !
கிடைத்துள்ளதை விரும்பு!!

நட்பு

என் உடம்பின்
உதிரத்தில் கலந்திருக்கும்
நட்பை விட
என் மனதின் ஓரத்தில்
பூத்திருக்கும் காதல்
பெரிதெனபடவில்லை எனக்கு !

Tuesday, July 6, 2010

என்னவள்

அனுப்பியவர்: சிவகாசி ஆனந்த்
அவள் என்னை கடந்து போனபோது
கொஞ்சம் நான் கலைந்து போனேன் ....
சற்றே திரும்பி ஓரக்கண்ணால்
ஒரு முறை பார்த்தபோது
முற்றிலும் நான் தொலைந்து போனேன் !!

ஏதும் முடியவில்லை

அனுப்பியவர்: சிவகாசி ஆனந்த்
நினைவுகள்....
உன்னை கானும்போது உன்னால் எழும் நினைவுகள்
என்னுள் புதைத்து கொள்கிறேன்.
உனக்கு தெரியாமல்..!
சுடும் என்று தெரிந்தும்
தொட துனிகிறேன்!!
உன்னை மறக்க முயற்ச்சிக்கிறேன்
மறு ஜென்மம் எடுத்து..!!

Tuesday, June 29, 2010

கை விட்டாள் கை பிடித்தாள்

அனுப்பியவர் : விஸ்வா
மச்சு வீடு கட்டி உன்னுடன் வாழ நினைத்தேன்
ஆனால்
மச்சினியுடன் வாழ வைத்துவிட்டு
நீ போய் விட்டாய்.
ஆனால் அவளால் உன் இடத்தை நிரப்ப முடியவில்லை.
 

கிடைத்ததும் கிடைக்காததுவும்

அனுப்பியவர் : லோகி- தாராபுரம்

கிடைத்ததை கொழுகம்பாய் மாற்று கிடைக்காததை
உன்னை இருக்கி சுற்றிய மலைபாம்பு
விட்டது சனியன் என நினைத்து நிம்மதியாகு
மனதை ஒருமுகபடுத்து தற்போதய பணியில்
தீவிர கவனம்  செலுத்து வரும் காலம் உன் கையில்
பணம் வந்தால் பத்தும் உன்னை தேடி வரும்
வரும் காலத்தில் கஷ்ட்டபடாமல் இருக்க இப்போதுதிவீரமாககஷ்ட்டபடு>>>>>>>>>
நண்பா!
நாளை என்ன இந்த வினாடியில் இருந்தே காலம் உனது கையில் தான்!!

எல்லாம் நீதான்

அனுப்பியவர் : சிவகாசி ஆனாந்
கனவுகளாக நான்
நினைவுகளாக நீ!
கற்புராமாய் கரைகிறது என் வாழ்க்கை
காதலித்துவிடு பெண்ணே!
இல்லை என்றால்
கல்லறை என் காவியம் பாடும்!!

Sunday, June 27, 2010

என்னைப் போல்

எழுதிப்பாருங்கள் என்னை போல
காதலில் தோற்று....
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்..!

இது தான் நட்பு

கவிதை என்பது யோசிப்பது!
காதல் என்பது நேசிப்பது !
நட்பு என்பது சுவாசிப்பது !
யோசிக்காமல் இருக்கலாம்.....
நேசிக்காமல் இருக்கலாம்...
ஆனால்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
இது தான் நட்பு!!

காதலும் நட்பும்

மரணத்தை நோக்கி நகரும் வாழ்க்கையில்
நம்மை வாழ சொல்லி வற்புறுத்துவது
காதலும் நட்பும் தான்.
காதலை நேசி......
நட்பை சுவாசி......

Saturday, June 26, 2010

காதல் ஓரு பார்வை

(எனது கோணத்தில்)
அனுப்பியவர் : லோகி- தாராபுரம்
காதல் காதல் ஏன் இந்த காதலை விட்டு
வெளியேறாமல் தவிக்கிரார்கள்
காதல் அலையால் இத்துனை பாதிப்பா
சே இந்த இளைஞ்சர்கள் ஏன் காதல் காதல் என காதலை
சே சே இந்த குமார் காதலை படிக்க போய்
எனக்கும் அதே பேச்சா வருதே
நான் எஸ்கேப் ஹா ஹா ஹா

Friday, June 25, 2010

நட்பு

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
Friendship enbathu
''kai_kum'',eye_kum ulla relation pola irukkanum,
'kai' la adipatta  'eye'  alum 
'eye' alutha 'kai' thudaikkum,,,,,

அவளுக்காக

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
அவள் விருப்பிய அனைத்தையும் நானும் விருப்பினேன்
அவள் வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன்
என்னையும் சேர்த்து........................
உனக்கு வரும் விக்கல் கூட கடினமாக இருந்தால் சொல்
உன்னை நினைப்பதையும் நிறுத்திவிடுகிறேன்.
காதலின் சின்னம் கேட்டேன்,
அவள் “ கல்லறை என்றால்”
கல்லறைக்கு வழி கேட்டேன் ,
என்னை காதலி என்றால் !!

கல்லறை

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
உண்மை சொல்ல கண்கள்,
பொய் சொல்ல பெண்கள்,
அதை நம்பியே ஆண்கள்,
உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்
பொய் சொன்ன பெண்கள் மணவறையில்
அதை நம்பிய ஆண்கள் கல்லறையில்!

காதலும், நட்பும்

அனுப்பியவர்: நாசிக்யிலிருந்து - யாசர் அரஃபத்
நேசித்த ”இதயத்தையும் “
சுவாசித்த “ அன்பையும்”
ஒரு நாளும் மறக்க முடியாது !
இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் 
அது காதல்,
கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால்
அதுதான் நட்பு !!

Thursday, June 24, 2010

படித்ததில் பிடித்தது !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி 

கை தவறி விழும் முன் சொன்னேன் 


'Sorry ' தாத்தா என்று …! 


தூங்கும் போது கழுத்து வரை 


போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் 

'Thanks ' ம்மா என்று …! 
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே 


வாழ்த்து அட்டையில் எழுதினேன் 


'Happy Birthday da' என்று …! 


காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் 


அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் 


'Good Morning Uncle' என்று …! 


கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் 


அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் 


'Hai' என்று …! 


மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் 


அவள் விரல் பிடித்தே எழுதுவேன் 


'I Love You' என்று …! 


இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை 


குத்தியது முள் … 


'அம்மா' என்று அலறினேன் 


குத்தியது முள்ளில்லை - என்னை 


குத்திக் காட்டியது - என் தமிழ் 

சிந்தனை செய் மனமே !!

அனுப்பியவர்: கோவை-நித்தியஸ்ரீ

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்க தோற்றால் வாழ்கையே இழப்பு ! 

நீ பிறந்து தரித்திரமாக இருந்தாலும் 
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் ! 
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . . ஆனால் 
அதற்கான தகுதி அனைவர்க்கும் உண்டு . . . முயன்றால் ! 
வாய்ப்புகளை பெறுபவன் அதிர்ஷ்டசாலி 
உருவாக்குபவன் புத்திசாலி
அதனை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்பவனே திறமைசாலி ! 

நேற்று நடந்ததை நினைத்திருந்தால் 
நாளை நடப்பது பிழையாகும் ! 
சிந்தித்து செயல்படு தோழனே 
வெற்றி உமக்கே !!