எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Friday, July 30, 2010

ஏன் இப்படி?

எப்போதும் என் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்த நீ, 
இப்போது
என் பெயர் இருப்பதால் என்னவோ உனக்கு பிடித்த ஷ்துதி கூட சொல்ல மறுக்கிறாய்....
(இது தான் வலியா.. இல்லை பழியா....)

Thursday, July 29, 2010

என்னுள் ரோஜாவாக நீ

அனுப்பியவர் : விஸ்வா
நான் ஒரு குப்பை,
என்னுள்ளளே!
பூத்த ரோஜா நீ,
என்னை பார்த்து விலகி சென்றவர்கள் ஏராளம்,
இப்போது என்னிடம் வருபவர்களும் ஏராளம்,
ஏனென்றால் என்னுள் நீ இருப்பதால்.......
(குப்பையில் பூத்த ரோஜா நீ...)

Wednesday, July 28, 2010

இதயம்

அனுப்பியவர் : விஸ்வா
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் 
காதலர்கள், 
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள்
அன்பான நண்பர்கள்......
( நன்றி: இதயத்தில் இருக்கும் அந்த நட்புக்கு......)

Saturday, July 17, 2010

என்னை பிடிக்கவில்லையா

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்
நானோ...
உனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்
இடைவெளியில்
கொஞ்சம் வேலை செய்வேன்..
நீயோ...
உன் வேலைகளுக்கு இடையே
என் குறுஞ்செய்திகளை படித்துகூட
பார்க்காமல் மொத்தமாய்
அழிப்பாய்..?!

மறவதே !!

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்

தினம்
உன் ரோஜா வளர்க்க
நீர் ஊற்றுவாய் மறக்காமல்...?!
தினம்
என் உயிர் வளர
ஒரு "குறுஞ்செய்தி" அனுப்புவாயா தோழி
மறக்காமல்..?

ஏன் மெளனம்

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்
உனக்கு தினமும்
நான் நூறு குறுஞ்செய்தி அனுப்புவது
ஒரு சாதனையே அல்ல...
ஆனால் அதில் நீ ஒன்றுக்கு கூட
பதில் அனுப்பாமல்
மௌனம் சாதிப்பாயே...
அதுதான் பெரிய சாதனை..?!

என் நினைவு

அனுப்பியவர் : ஜாகீர் - குவைத்
உன் கைபேசி முழுவதும்
நிரம்பி வழியும்
என் குறுஞ்செய்தி போல....
என் நினைவு முழுவதும்
நீதானடி
நிரம்பி வழிகிறாய்...?!

நேசிப்பாய் ........

பெண்னை நேசித்தவன் 
ஒரு நாள் என்னையும் 
நேசிப்பான் !
இப்படிக்கு 


ஒயின் ஷாப் !!!!
          என்ன கொடுமை சார் இது

அட என்ன அதிசயம்

12 வருடத்திற்கு ஒரு முறை
பூக்கும்
குறிஞ்சி மலர் கூட
“ உன் புன்னகையில்
பார்த்தேன் !!!

நேசிக்கிறேன்

உலகத்தில் 
மலரை நேசிப்பவர்கள்
முள்ளை நேசிப்பதில்லை! .
நான் முல்லை நேசிக்கிறேன் 
ஒரு மலர் என்னை காயப்படுத்தியதால்!!

என் இதயம்

நீயோ... 
கிளிப்பிள்ளையாய் சொன்னதையே
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு 
என்னடியில்...............
இறக்கப் பிறந்த இதயம் 
ஏனோ துடிக்கத் துடிக்கின்றது 
உன்னைக் காணும் பொழுதுகளில்......

Friday, July 9, 2010

என்னை விட்டு செல்லாதே !

இடைபட்டவள் நீ.....
நிழலுக்கும் நிஜதிற்கும் 
இடைபட்டவள் நீ
கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ
கடல் நுரைக்கும் காற்றிற்கும் 
இடைபட்டவள் நீ
தோழிக்கும் காதலிக்கும் 
இடைபட்டவள் நீ
இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே..

மாறிக்கொள்

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே !
கிடைத்துள்ளதை விரும்பு!!

நட்பு

என் உடம்பின்
உதிரத்தில் கலந்திருக்கும்
நட்பை விட
என் மனதின் ஓரத்தில்
பூத்திருக்கும் காதல்
பெரிதெனபடவில்லை எனக்கு !

Tuesday, July 6, 2010

என்னவள்

அனுப்பியவர்: சிவகாசி ஆனந்த்
அவள் என்னை கடந்து போனபோது
கொஞ்சம் நான் கலைந்து போனேன் ....
சற்றே திரும்பி ஓரக்கண்ணால்
ஒரு முறை பார்த்தபோது
முற்றிலும் நான் தொலைந்து போனேன் !!

ஏதும் முடியவில்லை

அனுப்பியவர்: சிவகாசி ஆனந்த்
நினைவுகள்....
உன்னை கானும்போது உன்னால் எழும் நினைவுகள்
என்னுள் புதைத்து கொள்கிறேன்.
உனக்கு தெரியாமல்..!
சுடும் என்று தெரிந்தும்
தொட துனிகிறேன்!!
உன்னை மறக்க முயற்ச்சிக்கிறேன்
மறு ஜென்மம் எடுத்து..!!