எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Thursday, September 30, 2010

நீயின்றி நானில்லை

நீயின்றி நானில்லை என்றாய் !!
பின் தீயின்மேல் என்னைவீசி கொன்றாய்  !!
நேற்றிருந்தோம் வெண்ணிலவில் ஒன்றாய் !
இன்று வேறொருத்தன் கைப்பிடித்து சென்றாய். !!!

♥ காதல்♥

"இதயமாக உள்ள உன்னை ஒரு 
கவிதையாக வரைய தொடங்கினால் 
எத்தனை புத்தகம் வேண்டும் என்று 
எனக்கு தெரியாது 
அதனால் தான் பெண்னே! 
கவிதை தலைப்பிற்கு பதிலாக 
உன் பெயரை எழுதி 
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......

காத்திருக்கிறேன் ...

நீ கேட்டதும்
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் ...
என் மனதை ,,

சொல்.....

நீ திரையிட்டு மறைக்கும்,-உன்
பெண்மையின் ரகசியங்களில்
நான் தேடும் என் காதலை,
எந்த இடத்தில்
ஒழித்து வைத்துள்ளாய் ??,
ஏதேனும் ஓர் இடத்திலா?,, 

Wednesday, September 22, 2010

உன்னாலும் முடியாது

என்னுள் நிறைந்து இருக்கும் உன்னை யாராலும் பிரிக்க முடியாது.. 
ஏன் நீயே 
நினைத்தாலும் கூட...

Wednesday, September 15, 2010

தெரியாது

உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது
நான் காதலிக்கிறேன் என்று
ஆனால்
ஒன்று மட்டும்
தெரிகிறது
காதல்
காதலை
காதலிக்கிறது

Tuesday, September 14, 2010

பிடிக்கவில்லை

என்னை பிடிக்கவில்லை 
என்ற வார்த்தை கூட அழகு தான்!
அவள் உதடுகள் உச்சரித்தபோது.....




             உயிர்
நீ விரும்பும் உயிருக்கு 
உன் அன்புபுரியாது.....!
உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை தவிரவேறு ஒன்றும்தெரியாது....!!!

Thursday, September 2, 2010

உன் மேல் என் அக்கரை

கண்ணுக்குள் இருக்கும்
உன்னை 
என் கண்ணீரால் கழுவுகின்றேன்,
காதலித்து கைவிட்ட கறை கூட 
உன்மேல் இருக்க வேண்டாம் என்று!!




வெட்கத்தை சிந்தி சிந்தியே என்னை சிதற வைத்தாய் கவிதையாக...

தோல்வி

எத்தனை முறை பார்த்தாலும் தோற்று போகிறேன்..
அவளின் ஒரே பார்வையில் ..!!
மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

Wednesday, September 1, 2010

என்னவளே

என்னவளே !
எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்...!
உன் இமைகாளகச் சொன்னான்...
உறங்கி விடுவேன் என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னான்...
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்...!!
உன் கூந்தலாகச் சொன்னான்...
உன் முகம் மறையுமே என்று மறுத்துவிட்டேன்..!!
உன் உயிராகச் சொன்னான்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய் என்று உதிர்த்து விட்டேன் ..!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக துடித்துக் கொண்டு இருக்க...!!!

உன் முடிவு

நான் சொல்லிய வார்த்தைகளால்
நீ துடித்ததை நான் அறிந்தேன்,
உன் துடிப்பில் தான் 
என் இதயமும் துடித்துக்கொண்டே இருக்கிறது...
என்னால்  உணர முடிந்த
அந்த வார்த்தைகளுக்கு உன்னால் முடிவு கிடைக்கும்......